Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச.)
மதுபான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மணி சிசோடியா உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்த டெல்லி சி.பி.ஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி வாதிடப்பட்டது.
அப்போது உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தவிட்டனர்.
மேலும் சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் குறிப்பிட்ட அந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்
மேலும், மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
குறிப்பாக அடுத்த உத்தரவு வரை விசாரணையை நிறுத்தி வைப்பதாக ஆணையிட்டது.
பின்னர் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam