Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.
கடந்த மூன்று ஆட்டங்களில் சேட்டன் சஞ்சு சாம்சன் பொறுமையுடன் விளையாடியதையும், முக்கியமான நேரங்களில் திறமையாக செயல்பட்டதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
போட்டி முழுவதும் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா ஒரு சிறந்த வெற்றியைப் பெறவும், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லவும் உதவி செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM