நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, 09 மார்ச் (ஹி.ச) வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5 ம் தேதி டெல்லியில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆ
Changes to the Velachery - Parangimalai flying train service


சென்னை, 09 மார்ச் (ஹி.ச)

வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5 ம் தேதி டெல்லியில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை (10 ந் தேதி) முதல் பரங்கிமலை - வேளச்சேரி வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b