மகளுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என விரக்தியில் இருந்த தந்தை கிணற்றில் சடலமாக மீட்பு - தந்தை உடலைக் கண்டு மகள் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் (57) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், தனது இரண்டாவது மகள் பாக்கியம் என்பவருக்கு 30 வயது கடந்தும் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற விரக்தியில
Hangi


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் (57) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், தனது இரண்டாவது மகள் பாக்கியம் என்பவருக்கு 30 வயது கடந்தும் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கிருஷ்ணகுமார் காணவில்லை என்பதால் அவரது மகள் வீடு முழுவதும் தேடியுள்ளார்.

பின் வீட்டின் பின்பக்கமுள்ள கிணற்றைப் பார்த்த போது, தந்தையின் உடல் மிதப்பதை கண்டு வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆட்டோ டிரைவரின் மனைவி, தன் மகள் தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்ததைக் கண்டு வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டனர்.

மேலும், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டு பார்த்தபோது, சேலையால் கழுத்து இறுக்கப்பட்டு சடலமாக இருப்பது தெரிய வந்தது.

கிருஷ்ணகுமார் கொலை செய்யப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா? என வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ