Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 09 மார்ச் (ஹி.ச.)
வருகின்ற 11ஆம் தேதியன்று திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்
மாபெரும் மாநாடு நடைபெறுவதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு, உள்ளிட்ட பகுதிகளில் மாநாட்டிற்காக தமிழக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி திரு பழனிச்சாமி என்றும் மந்திரி சபையில் எந்த ஒரு சீட்டும் கேட்கவில்லை என்றும் தமிழகத்தில் 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவதாக
தெரிவித்து விட்டனர்.
அதனால் இது வரைக்கும் அவர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam