ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 13. 20 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்
Special trains to run between Thiruvananthapuram and Chandrakachchi


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 13. 20 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு

புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06081), கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 2.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 16, 23 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் (06082), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b