Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
சென்னை அம்பத்தூர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இலியா சாமுவேல்/21. இவர்,அதே
பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கடந்த 2022ம்
ஆண்டு கைதாகி சிறை சென்றார்.
ஜாமினில் வெளி வந்த அவர், அவ்வப்போது மதுபோதையில்
அட்ராசிட்டி செய்வது வழக்கம் என தெரிகிறது.
இந்நிலையில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் 26-ம் தேதி இரவு அப்பகுதியில் கேரம்போர்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று வாலிபர்களிடம், இலியா சாமுவேல், வீண் தகராறு செய்து, கையால் தாக்கியதாக தெரிகிறது.
மேலும் சாவுக்கும் சண்டைக்கும் அஞ்சாதவன் என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்ஸ் வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த மூவரும் தனது வீட்டின் அருகே சுற்றிதிரிந்த இலியா
சாமுவேலை பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டிச் சென்று, சரமாரியாக
வெட்டியுள்ளனர்.
இதில் தலை, முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. அங்கிருந்தவர்கள் இலியா சாமுவேலை மீட்டு,
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின் மேல்
சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, இலியா சாமுவேல் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எலியா சாமுவேல் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சென்னை அம்பத்தூர்,சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த
பெரியசாமி/21,பரத்/21 மற்றும் சந்தோஷ்/19 ஆகியோரை ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam