ஈரானின் புதிய அதிபராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமனம்
ஈரான், 09 மார்ச் (ஹி.ச.) அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் அதிபர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். மேலும், ராணுவ அதிகாரிகள் உட்பட பல மு
ஈரானின் புதிய அதிபராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமனம்


ஈரான், 09 மார்ச் (ஹி.ச.)

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக போர் தொடுத்துள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானின் அதிபர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். மேலும், ராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரமாக ஈரானில் போர் செய்து வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உட்பட பல நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த ஆறு மாதங்களுக்கு தீவிரமாக போர் செய்ய முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக மதகுருமார்கள் குழு ஆலோசனை நடத்தியது.

அதன்படி, அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM