Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 09 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த 6 மாத கர்ப்பிணி செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே செயல்பட்டு வரும் ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 6 மாத கர்ப்பிணி பெண் செவிலியர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அதே சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர் அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அரசு அலுவலகங்களிலேயே பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண் செவிலியரிடம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பணிமூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN