தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்கேற்கும் ராஜேந்திர விஸ்வநாத் மார்ச் 12-ஆம் தேதி பதவியேற்பு
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் தி
தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட கேரள ஆளுநர்  ராஜேந்திர விஸ்வநாத் மார்ச்  12-ஆம் தேதி பதவியேற்பு


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த மார்ச் 5-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதை முன்னிட்டு ஆர்.வி.ஆர்லேகர் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். அதே நாளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

அவரை ஆளுநர் மாளிகை அதிகாரிகளும், ஊழியர்களும் வழியனுப்பி வைக்கின்றனார்.

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகர் மார்ச் 12-ஆம் தேதி முற்பகல் சுமார் 12 மணியளவில் பதவியேற்கிறார்.

உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறார்.

இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / vidya.b