Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 09 மார்ச் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம்
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த ஞானசிகாமணி (70) மற்றும் கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (58) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN