Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச.)
அரியானாவில் லேசான நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
ரேவாரி பகுதியில் இன்று காலை 7.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது.
இது 5 கி.மீ ஆழத்தில், 28.31 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக முதலில் கணிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவரவில்லை.
இதற்கு முன்பு, நேற்று ஒரே நாளில் அருணாச்சல பிரதேசத்தில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM