முதியவரை கொலை செய்துவிட்டு மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
கிருஷ்ணகிரி, 09 மார்ச் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓபக வலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (வயது 70) மற்றும் அவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 60) ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இரவு கண்ணப்பன் வெளிய
கொலை


கிருஷ்ணகிரி, 09 மார்ச் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓபக வலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (வயது 70) மற்றும் அவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 60) ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இரவு கண்ணப்பன்

வெளியேயும், செல்லம்மாள் வீட்டிற்கு உள்ளேயும் உறங்கி இருந்துள்ளனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வெளியே உறங்கி இருந்த கண்ணப்பனை தலையில் பலமாக தாக்கியுள்ளார். கண்ணப்பனின் அலறல் சத்தம் கேட்டு சென்னம்மாள் வெளியே வந்துள்ளார் .

வெளியே வந்த சென்னம்மாவை மர்ம நபர் வீட்டுக்குள்ளே தூக்கிச் சென்று பாலியல்

வன்புணர்வு செய்துள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கண்ணப்பனை பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

பின்னர் சென்னம்மா மற்றும் கண்ணப்பனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு

சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னம்மாவை

மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியாக இருந்த முதியோரை கொலை செய்துவிட்டு மூதாட்டியை பாலியல் வன் புணர்வு

செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி

உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam