சென்னையில் முன்விரோதம் காரணமாக இரட்டை கொலை -போலீஸ் விசாரணை
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) சென்னை முடிச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 20) பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மணலி பகுதியில் தலைமறைவாக தங்கி இருந்தார். அதன் பிறகு திரிசூலம் பகுதியில் உள்ள மண
கொலை


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

சென்னை முடிச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம்

(வயது 20) பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மணலி பகுதியில் தலைமறைவாக தங்கி இருந்தார்.

அதன் பிறகு திரிசூலம் பகுதியில் உள்ள மணி என்பவருடைய குடிசை வீட்டில் தங்கி இருந்த நிலையில் அவரையும் அவருடன் தங்கியிருந்த 17 வயதுடைய சதீஷ் என்ற நபரையும் எட்டு பேருக்கு மேல் கும்பலாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக இரண்டு நபர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை செய்ய பட்டஇவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கும் நிலையில் தடையில் உறுப்பினர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக குடிசை வீட்டில் நான்கு பேர் ஐந்து பேர் என அடிக்கடி கும்பல் கும்பலாக தங்கி போதை பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் பொழுது வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

ஒருவரின் முகம் முற்றிலும் சிறைப்பட்ட நிலையில் யார் என அடையாளம் காணு முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது சுங்குவார்சத்திரம் பகுதியைச் சார்ந்த ஆல்பர்ட் என்பவரை கொலை செய்த வழக்கும் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கும் உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam