மறைந்த மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) பத்திரிகையாளர் வட்டாரங்களில் ‘எஸ்.ஆர்’ என்று அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளருமான எஸ்.ராமசாமி (74), சென்னையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 1978-ம் ஆண்டு முதல்
Senior journalist PTI Ramasamy passed away


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

பத்திரிகையாளர் வட்டாரங்களில் ‘எஸ்.ஆர்’ என்று அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளருமான எஸ்.ராமசாமி (74), சென்னையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

1978-ம் ஆண்டு முதல் பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய இவர் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகளை பதிவு செய்தவர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் மூத்த தலைவர்களான ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் நட்புறவு கொண்டிருந்தவர்.

அரசியல் வட்டாரத்தில் இவர் பிடிஐ ராமசாமி என்றே அறியப்பட்டார்.

இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

ராமசாமியின் இறுதிச் சடங்குகள் பெசன்ட்நகரில் இன்று நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b