Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மார்ச் (ஹி.ச)
மாநில கட்சிகளை பாஜக அழிக்க நினைப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உண்மையில் மாநில கட்சிகளை அழிக்க நினைப்பது யார்? என பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மாநில கட்சிகளின் வளர்ச்சியை மதிக்கும் ஒரே கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே. பா.ஜ.க மாநில உரிமைகளை மதிக்கிறது, ஆனால் மாநில கட்சிகளை ஒடுக்கி, உடைத்து, அரசுகளை கலைத்த வரலாறு காங்கிரசுக்கு மட்டுமே உண்டு.
சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்ததில் காங்கிரஸ் பிரதமர்களின் பட்டியல் இதோ:
நேரு: 8 முறை
இந்திரா காந்தி: 50 முறை
மன்மோகன் சிங்: 10 முறை
தமிழ்நாட்டிலேயே தி.மு.க மற்றும் அ.தி.மு க அரசுகளை தங்களின் அரசியல் சுயநலத்திற்காக ஈவு இரக்கமின்றி கலைத்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. அதுமட்டுமின்றி, திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.மு.கருணாநிதி, திரு.என்.டி.ராமராவ் மற்றும் திரு.ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற பல மாநிலத் தலைவர்களின் அரசுகளை கலைத்து, மாநில கட்சிகளின் குரல்வளையை நசுக்கியதும் காங்கிரஸ் தான்.
பா.ஜ.க கூட்டணிகளை உருவாக்குகிறது, மாநில கட்சிகளை அரவணைக்கிறது. ஆனால் காங்கிரஸ் அவற்றை அழிக்கிறது. தமிழக மக்களுக்கு இந்த நிதர்சனமான உண்மை நன்றாகவே தெரியும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ