ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரை மற்றும் அன்புமணிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகிய
ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரை மற்றும் அன்புமணிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார்.

இதில் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் அஇஅதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.தம்பிதுரை அவர்களுக்கும், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b