Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச)
திமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு நடத்திமகளிர் தினத்தில் தாய் மாமன் சீர் செய்து நெகிழ்ச்சியான நிகழ்வை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் சென்னை பாரிமுனை பகுதியில் சர்வே எடுக்கச்சென்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தவெக மகளிர் அணி நிர்வாகியான பவானி தீபக் என்பவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பவானி தீபக்கிற்கு தமிழக வெற்றி கழகம் துறைமுகம் தொகுதி மாவட்ட நிர்வாகி விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்து வளைகாப்பு நடத்தினர்.
இந்த தருணத்தின் போது பவானி தீபக் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ