Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 125% அதிகரித்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பேடு வெளிப்படுத்திய நிலையில், மகளிர் தினத்தன்று வெளிவந்துள்ள இந்த செய்தி ஒரு தாயாக மனதை பதைபதைக்கச் செய்கிறது.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கேவலப்பட்ட ஆட்சியை நடத்திவிட்டு, அப்பா என்ற பட்டத்திற்கு மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசைப்படுவது அருவருக்கத்தக்கது.
பாதுகாப்பை கூறு போட்டு சட்டம் ஒழுங்கை சந்திசிரிக்கச் செய்த தரங்கெட்ட திமுக ஆட்சி என்னும் கள்ளிச்செடி மொத்தமாக களை எடுக்கப்பட்டால் மட்டும் தான் தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் நிம்மதியாக வாழ முடியும்!
எனவே, இந்த மகளிர் தினத்தில் பெண்கள் விரோத திமுகவை விரட்டியடிப்போம் என உறுதியேற்போம்!
நம் வீட்டுப் பெண்களை நிம்மதியாக வாழ வழிவகுப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ