Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 09 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் வெள்ளியங்கிரி மலைக்கு தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். மலை ஏறும் போது முதல் மலைக்கு செல்லும் வழியில் குரங்கு பாலம் அருகே ஒருவர் நினைவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து ஹரிதாஸை டோலி மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற பக்தர்களில் உயிரிழப்பு ஏற்பட்ட மூன்றாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN