Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்து அணியும் விளையாடின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முதலில் முடிவு செய்தது. அதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்சன் (89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) போன்றோர் அதிரடியாக ஆடினர். இந்திய அணி சிக்ஸர் மழை பொழிந்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு, 257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், 19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
எனவே, 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் சாம்பியன்!
டி20 உலகக் கோப்பையை மறுபடியும் வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. இந்திய அணி வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM