மருதமலை முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கோவை, 09 மார்ச் (ஹி.ச.) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய மருதமலை கோவிலானது கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மருதமலைக்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும்
Ban on using cell phones at Maruthamala Murugan Temple


கோவை, 09 மார்ச் (ஹி.ச.)

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய மருதமலை கோவிலானது கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மருதமலைக்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் முன்பாக நின்று செல்ஃபி எடுப்பதையும், வீடியோ எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

இது சன்னதிக்கு உள்ளே தரிசனம் செய்ய வரும் மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து இக்கோவிலில் தற்போது செல்போன் பயன்பாடு முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ராஜகோபுரம் நுழைவாயில் முதல் ஆதிமூலவர் சன்னதி வரை, சுப்பிரமணிய சுவாமி சன்னதி மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதி, கோவில் உட்பிரகாரம் என ஒட்டுமொத்த கோவில் வளாகத்தில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அனைவரும் அமைதியான மற்றும் தெய்வீகமான முறையில் சாமி தரிசனம் செய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக்க தெரிவித்துள்ள கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் தங்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கக் கோவில் நுழைவு வாயில் அருகே லாக்கர் (Locker) வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் ஆன்மீகப் புனிதத்தைப் பேண பக்தர்கள் அனைவரும் இந்த புதிய நடைமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b