மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500-ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி, 09 மார்ச் (ஹி.ச.) மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத்திடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக ஏர் உழவன் அனைத்த
maize should be fixed at Rs. 2500.


தூத்துக்குடி, 09 மார்ச் (ஹி.ச.)

மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத்திடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

விளாத்திகுளம் தொகுதியை வறட்சி பாதிக்கபபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.15ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிட வேண்டும்.

வைப்பாற்றில் வீட்டு உபயோகத்திற்கு மாட்டு வண்டியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b