உடல் நலக்குறைவால் தந்தை மறைந்த சோகம் - பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்
தஞ்சாவூர், 09 மார்ச் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதி மகன் சாய்நிஷாந்த் (17) பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து
Plus 2 public exam


தஞ்சாவூர், 09 மார்ச் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதி மகன் சாய்நிஷாந்த் (17) பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு

(பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார்.

இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் இன்று

(மார்ச் 09) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

மாணவர் சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு நடைபெறுவதால், தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் வேதியியல் தேர்வு எழுத சென்றுள்ளார்.

சாய்நிஷாந்த் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தனது தந்தை காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார்.

பள்ளிக்கு சென்ற மாணவன் சாய்நிஷாந்தைப் பார்த்து, சக நண்பர்களும் கட்டியணைத்து அழுதனர்.

Hindusthan Samachar / vidya.b