போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 16- வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த பாரதி(25) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்த
கி


திண்டுக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 16- வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த பாரதி(25) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள்,

பாரதிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Hindusthan Samachar / Durai.J