Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 01 ஏப்ரல் (ஹி.ச.)
நகர்ப்புற தூய்மை மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றும் மாநில அரசின் திட்டங்களின் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோ மாநகராட்சிக்காக 250 மின்சார மற்றும் இயற்கை எரிவாயு வாகனங்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், புதிய உத்தரப்பிரதேசம் ‘பூஜ்ஜியக் கழிவு முதல் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு வரை’ என்ற இலக்குடன் இணைந்து, உலகத் தரத்திலான நகர்ப்புற மையமாக தன்னை உருவாக்கிக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, லக்னோ மக்களுக்கு ‘வாழ்வின் எளிமை’ உறுதி செய்யும் நோக்கில், லக்னோ மாநகராட்சியின் 250 மின்சார மற்றும் இயற்கை எரிவாயு (CNG) வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.
இந்த வாகனங்கள் தூய்மை, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ‘இரட்டை எஞ்சின் அரசு’ கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் லக்னோவை தூய்மையான, பசுமையான மற்றும் திறன்மிக்க நகரமாக மாற்றும் முயற்சிகள் மேலும் வேகம் பெறும்.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM