கும்மிடிப்பூண்டி பொன்னேரி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம்
திருவள்ளூர், 01 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பலராமன் பங்கேற்றார். இதில் மீஞ்சூர் மேற்கு ஒன்
க்


திருவள்ளூர், 01 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பலராமன் பங்கேற்றார்.

இதில் மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் பொன்னேரி நகராட்சி சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் அனைவரும்

சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்

இதில்

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக் கூட்டத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்கள்

பொன் ராஜா

கே பி கே சேகர்

பாமக மாவட்ட செயலாளர்

வி எம் பிரகாஷ்

பாஜக மூத்த நிர்வாகி

ஆர் எம் ஆர் ஜானகிராமன் பொன்னேரி நகர செயலாளர்

செல்வகுமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் வினோத் முத்துக்குமார் தர்ம பிரகாஷ் சுமத்ரா குமார் செல்வகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதே போன்று கும்மிடிப்பூண்டி எளாவூரில்

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சுதாகரை மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் அறிமுகம் செய்து வைத்தார்.

Hindusthan Samachar / Durai.J