சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.) சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிறு தொழில்கள் மற்றும் உணவகங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களில் த
சிலிண்டர்


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிறு தொழில்கள் மற்றும் உணவகங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களில் தொடர்ந்து உயர்ந்து தற்போது சுமார் ரூ.2,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

சில இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கருப்பு சந்தையில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக தேநீர் கடைகள், சிறு உணவகங்கள் உள்ளிட்டவை விலையை உயர்த்தவோ அல்லது கடைகளை மூட உள்ளன.

சர்வதேச சந்தை நிலைமைகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் உணவுப் பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam