வரும் 6 ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.) வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 10 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள அறிவித்து உள்ளது. அதில் விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த் விருதுநகர் - விஜய பிரபாகரன்; தருமபுரி- இளங்கோவன்; குடியாத்த
Prema


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 10 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள அறிவித்து உள்ளது.

அதில் விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் - விஜய பிரபாகரன்;

தருமபுரி- இளங்கோவன்; குடியாத்தம் (தனி) - கே.பி.பிரதாப்;

சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ்;

போளூர் - டி.பி.சவரணன் ; பல்லாவரம் - அனகை முருகேசன்;

திருத்தணி - டி.கிருஷ்ணமூர்த்தி,

ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன் மைலம் - எல்.வெங்கடசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்ய நான்கு நாட்களில் ஏற்கனவே 31 தேதி முடிவடைந்துள்ள நிலையில் கடைசி நாளாக 6 ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

ஏப்ரல் 5 தேதி விருதாச்சலம் செல்லும் பிரேமலதா அடுத்த நாள் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ