Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 01 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம் பண்ணை கீழச்செல்லைபுரம் பகுதியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தீப்பெட்டி ஆலைகள் உரிமையாளர்களை திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் வருவாய்துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், கிருஷ்ணகுமார், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் நேரில் சந்தித்து. உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து வெம்பக் கோட்டையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களிடம் திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறினார்.
பின்னர் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து பட்டாசு தொழிலுக்கு திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என உறுதி கூறினார். பின்னர் நிர்வாகிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
ஆலங்குளம், கல்லம்ம நாயக்கர்பட்டி, எட்டக்காபட்டி, மண்குண்டாம்பட்டி, பேரநாயக்கர்பட்டி, மற்றும் தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த on முக்கியஸ்தர்களையும் நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கடற்கரை ராஜ் ஆகியோர் ஆதரவு திரட்டினர்.
எதிர்கோட்டையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் ஆலோசனையின் பேரில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி ஏற்பாட்டில் ராமுதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியை சேர்ந்தவர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தவர்களுக்கு வேட்பாளர் கடற்கரைராஜ் திமுக கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J