Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர் விராலிமலை வேட்பாளர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பழுவஞ்சி பெரு மாநாடு குமரமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விராலிமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பொதுமக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்போது அவர் பேசியதாவது,
எல்லா கஷ்டத்திலும் உங்களோடு நான் இன்று தற்போது தேர்தலில் நின்று உள்ளேன்
சில பேர் உங்களோடு எப்போதும் நிற்காமல் தேர்தலில் மட்டும் நின்று வாக்கு கேட்க வருகின்றனர்.
தேர்தல் முடிந்து நமது ஆட்சி வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் ப
முன்னதாக அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மேல தாளத்துடன் பொதுமக்கள் அவருக்கு குலவையிட்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
Hindusthan Samachar / Durai.J