Enter your Email Address to subscribe to our newsletters

ஜெருசலேம், 01 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளையும், இஸ்ரேலையும் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது நடைபெறும் நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் தொடர்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக பயங்கரவாத அரசாக உள்ள ஈரான் நிர்வாகத்தை பலவீனப்படுத்தியுள்ளோம்.
இந்த நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை. ஈரான் அரசு தற்போது நிலைகுலைந்த நிலையில் உள்ளது.
விரைவில் அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM