Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
ஜெயலலிதா பல ஆண்டுகளாக செல்வவரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு செல்வவரி சட்டம் பிரிவு 35ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
அதனை விசாரித்த தீர்ப்பாயம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம்வில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது சட்டபூர்வ வாரிசுகளான தீபா மற்றும் தீபக் வழக்கில் இணைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ. ஜெயச்சந்திரன் மற்றும் சமீம் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேல்முறையீடு செய்த வருமான வரித்துறை அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று, நீதிபதிகள் இந்த வழக்கை மேலும் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்க முடியாது எனக் கூறி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam