சின்னசேலத்தில் மின் கம்பத்தில் மின்சார ஊழியர் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரம் அருகே அமைந்துள்ள செல்வம் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்து வருகிறது. இந்த தேர்விழாவின் போது தேர் முக்கிய வீதிகளில் உலா வருவது
தீ


கள்ளக்குறிச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரம் அருகே அமைந்துள்ள செல்வம் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்து

வருகிறது.

இந்த தேர்விழாவின் போது தேர் முக்கிய வீதிகளில் உலா வருவது வழக்கம் .

இதற்காக சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களில் மின் கம்பங்களை அகற்றிட மின்சார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பணியின் போது சின்ன சேலம் காந்தி நகர் பகுதியில் சேர்ந்த தமிழரசன் வயது

22 என்பவர் கடந்த சில மாதங்களாக ஒப்பந்தம் அடிப்படையில் தினக்கூலியாக வேலை

செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சின்னசேலம் மூங்கில் பாடி சாலையில் தேர் வீதி உலா வரும்பொழுது

இடைஞ்சலாக உள்ள மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெற்றது தமிழரசன் என்ற இளைஞர்

மின் கம்பத்தில் ஏறி மின்சார கம்பிகளை அவிழ்க்க முயன்ற போது எதிர்பாராத விதமாக

மின்சாரம் தாக்கி கம்பத்திலேயே எரிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்

இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு தமிழரசனை

மீட்டுள்ளனர்.

மேலும் மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு முன்பாக மின்சாரம் துண்டிக்காததால் இந்த

விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி

வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை

மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும்

கோரிக்கை வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam