Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 01 ஏப்ரல் (ஹி.ச.)
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சை சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்
டி.கே.ஜி. நீலமேகம் பேசியதாவது:
தஞ்சை சட்டமன்றத் தொகுதி நமது வெற்றி வேட்பாளர் சண். ராமநாதனை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்கிற சூழுரைப்பதற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்.
1 லட்சம் வாக்குகள் என்பதை நான் அதிகமாக கூறுவதாக யாரும் கருத வேண்டும்.
காரணம்
இது வரை நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 36 ஆயிரம் வாக்குகள், 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.
அதேபோல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முரசொலிக்கு 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறோம்.
இந்தநிலையில் இன்றைக்கு அமைந்து இருக்கிற தேர்தல் சூழ்நிலையில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பதை சர்வ சாதாரணமாக நாம் பெற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். நமது தலைவர் அறிவித்துள்ள வேட்பாளர் சண் . ராமநாதன் வெற்றிக்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று இங்கு பேசிய அஞ்சுகம் பூபதி கூறினார்.
அதேதான் நானும் வலியுறுத்தி கூறுகிறேன். எனவே தலைவரால் அறிவித்துள்ள நமது வேட்பாளர் சண் . ராமநாதன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய வேண்டும்.
அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு பாடுபட வேண்டும் என்று மனதார கூறுகிறேன்.
நமது ஆட்சி சிறப்பாக இருப்பதற்கு காரணம் நமது கொள்கைக் கோட்பாடுகளை உணர்ந்து பணியாற்றும் தொண்டர்களின் உழைப்பே காரணம்.
அந்த உழைப்பை இந்த தேர்தலில் நாம் காட்ட வேண்டும். திமுக இயக்கம்தான் எனது மூச்சு என்று உழைக்கும் ஒவ்வொரு தொண்டனின் உழைப்பால் தான் நாம் வாழையடி வாழையாக வெற்றி வாகை சூடி கொண்டு இருக்கிறோம். தற்போதும் வெற்றியை சூழப்போகிறோம். அந்த வெற்றியை பெறுவதற்கு நம் அனைவரும் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / Durai.J