Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் புதுமையான முறைகேடு நடந்துள்ளது. அங்கு பதற்றம் நிறைந்த
வாக்குச்சாவடிகள் அடையாளம் கண்டறியப்பட்டு இருந்தது தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
அதாவது BOOTH CAPTURING நடக்க வாய்ப்புள்ளது என கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 22 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆனால் அது அப்படியே நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது குறித்து எங்களது சேப்பாக்கம் திருவல்லிகேணி வேட்பாளர் ஆதி ராஜா ராம் மனு அளித்தார். குறிப்பாக 116 வார்டில் உள்ள கவுன்சிலர்
காமராஜ் என்பவர் பதிவேடு குற்றவாளி பட்டியலில் அவரது பெயர் உள்ளது. இவை அனைத்தும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே அங்குள்ள தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்போது அங்கு உள்ளவர்கள் எல்லாம் புனிதமானவர்களாக ஆகிவிட்டார்கள் எனவும் பதட்டமான தொகுதிகள் அனைத்தும் சாதராண தொகுதியாக மாறிவிட்டதா என கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கலவரம் நடக்கக்கூடிய வாக்குச்சாவடிகள் அது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் அங்கு வரும் வாக்காளர்களை மிரட்டுவார்கள். அதனால் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் மத்திய படையினர் 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை அது மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.
ஏன் என்றால் அது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி என்பதால் பலத்த சந்தேகம் அதிமுகவிற்கு எழுந்துள்ளது.
மேற்குவங்கம் போல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் தண்டபாணி என்பவருக்கு மர்ம மரணம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். திமுக நிர்வாகி தூண்டுதல் பேரில் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகள்களை வைத்து விபச்சாரம் செய்பதாக கூறி வழக்கு பதிவேன் என கூறியதால் காவல்நிலையத்திலே அவர் மண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்டார். காவல்நிலையத்தில் எப்படி மண்ணெய் வந்தது. இது கொலையா அல்லது தற்கொலையா என
தெரிய வேண்டும்.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இல்லை என்றால் இது குறித்து எந்த செய்தியும் வெளியே வந்து இருக்காது.
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J