நாங்குநேரியில் 2 பேர் கொலை - 7 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி, 01 ஏப்ரல் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்களை குறிவைத்து, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது சமீபத்தில் நடைபெற்றது இந்த தாக்குதலில்
கைது


திருநெல்வேலி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே

பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்களை குறிவைத்து, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது சமீபத்தில் நடைபெற்றது

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி,7 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்ததால், அவர்களுக்கு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam