ஒடிசா நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.) 1936-ஆம் ஆண்டு மொழிவாரிய அடிப்படையில் ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட தினமாகும் ஒடிசா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூ
ஒடிசா நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

1936-ஆம் ஆண்டு மொழிவாரிய அடிப்படையில் ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட தினமாகும் ஒடிசா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் “உத்கல திவசா” (Utkala Dibasa) கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஒடிசாவின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், பல்வேறு துறைகளில் அம்மாநில மக்கள் செய்த பங்களிப்புகளைப் பாராட்டி, மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைய வாழ்த்தினார்.

இதுதொடர்பாகபிரதமர் மோடிதனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,

உத்கல திவசா என்ற சிறப்புநாளில் எனது வாழ்த்துகள்.

கலாச்சார மற்றும் ஆன்மீக பெருமைகளுக்கு அழியாத அடையாளமாக ஒடிசா நிலைகொண்டுள்ளது. ஒடியா இசை, கலை, இலக்கியம் இந்தியாவை பல்வேறு வழிகளில் செழுமைப்படுத்தியுள்ளது. உறுதிப்பாடு, எளிமை மற்றும் கனிவான பண்புகளுக்குப் பெயர் பெற்ற ஒடிசா மக்கள் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

வரும் காலங்களில் ஒடிசா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சிகளை எட்டட்டும்.

என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM