பழனி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா - இன்று மாலை தேரோட்டம்
திண்டுக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா களைகட்டியுள்ளது. கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்
Palani


திண்டுக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா களைகட்டியுள்ளது.

கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

மலை அடிவாரப் கிரிவலப் பாதையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக, திண்டுக்கல் மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், கோவை,மற்றும் கரூர் மாவட்டங்களிலிருந்து காவடி ஏந்தி பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகத் தீர்த்தக் காவடி, மயில் காவடி மற்றும் மலர்க்காவடிகளுடன் 'அரோகரா' முழக்கமிட்டு கிரிவீதியில் வலம் வந்தவண்ணம் உள்ளனர்.

வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், முருகப்பெருமானைக் குளிர்விப்பதற்காகக் கொடுமுடி உள்ளிட்ட புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.

இன்று காலை தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமி, நண்பகல் 12:00 மணி அளவில் மிதுன லக்கினத்தில் திருத்தேரில் எழுந்தருள உள்ளார்.

அதன்பிறகு தேருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மாலை 4:30 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நான்கு கிரிவீதிகளிலும் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது.

நேற்று மாலை வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், அதனைத் தொடர்ந்து வெள்ளித்தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சாமி கிரிவலம் பாதையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழா நடைபெற்ற நிலையில், இன்று தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால், கிரிவீதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது

மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் நெரிசலை தவிர்க்கும் விதமாக 500, 500 பக்தர்களாக தடுத்து நிறுத்தப்பட்டு கோவில் நிர்வாகம் காவல்துறையினரும் அனுப்பி வைக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN