Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 01 ஏப்ரல் (ஹி.ச)
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி புதுச்சேரியில் இன்று (01.04.2026) புதன்கிழமை பண்டசோழநல்லூர் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு,
பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் பராமரிப்பு பணி கள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
இதனையொட்டி குருவிநத்தம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தான்மேடு மற்றும் சோரியாங்குப்பம் உள் ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN