Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் 4-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த பிரச்சாரம் நடைபெற உள்ளது.
பிரச்சாரத்திற்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவை கொக்கு பார்க் மார்க்கெட்டிங் கமிட்டி மைதானம், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பு மற்றும் வில்லியனூர்–கூடபாக்கம் சந்திப்பு ஆகியவை.
இந்த இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ரோடு ஷோவிற்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 மணி நேரம் போதுமானதல்ல எனக் கூறி, 6 மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam