Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஏப்ரல் (ஹி.ச.)
ஆர்.டி.இ. மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது ப
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026-27ஆம் கல்வி ஆண்டில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கை கோரி விண்ணப்பிக்கலாம்.
எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-08-2021 முதல் 31-07-2022-க்குள்ளும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2021 முதல்
31-07-2020-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.
Hindusthan Samachar / Durai.J