நாளை காலை 11 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு செய்யவுள்ளார் - தயாநிதிமாறன் தகவல்
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச) சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அண்ணா நகர் வேட்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மேலும் சி
Udhaya


Dhayanirhi


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அண்ணா நகர் வேட்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

மேலும் சிந்தாதிரிப்பேட்டை உட்பட 8 இடங்களில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பேசியதாவது,

சேப்பாக்கத்தில் நாங்கள் ஏற்கனவே துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம்.

நாளை காலை 11 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து அன்று மாலையும் 3 தேதி காலையும்,மாலையும் சேப்பாக்கத்தில் தெருத்தெருவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.

கடந்த முறையை விட இந்த முறை சேப்பாக்கத்தில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார்.

அதற்க்கு காரணம் மாதத்தில் 4 முறையாவது இந்த பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டின் பெருமையை தலை நிமிர்த்திற்கும் திமுகவிற்கு தான் போட்டி.

பாஜகவை பொருத்தவரை நேரடியாக திமுகவை வீழ்த்த முடியாது என்பதால் மறைமுகமாக A டீம் அதிமுகவும் B டீம் தவெகவையும் வைத்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ