Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சூழலில், நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம் தான் என்றும் ஒரு வேட்பாளர் நான்கு இடங்களில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு திருச்சி மரக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேச உள்ளதாகவும் மே நான்காம் தேதி தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் நாளாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
51 விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை திருச்சி மாநகர காவல் துறை வழங்கி உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,
தேர்தல் ஆணையம், அரசு நிர்வாகங்கள்
எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்.
திமுகவும் அதிமுகவும் தல 200 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம் என கூறி வருவதாகவும் தமிழகத்தில் உள்ளது 234 தொகுதிகள் தான் உள்ளது, அப்படி என்றால் மீதமுள்ள தொகுதிகளுக்கு
கர்நாடகத்தில் போய் ஜெயிப்பார்களா என நக்கலாக
கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam