மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை, அந்த ஒரு முகம்-நடிகர் ஸ்ரீநாத்
மதுரை, 01 ஏப்ரல் (ஹி.ச.) தேர்தல் தேதி வெளியான பின்னர் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை முடுக்கி உள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர் அந்த
T


மதுரை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

தேர்தல் தேதி வெளியான பின்னர் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை முடுக்கி உள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தாவேக் கவுண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்;

என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி பத்திரிக்கையாளர்கள் தவெகவுக்கு உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் எங்களின் தலைவருக்கும் எனக்கும் உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும்

முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு:

இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவரரு வேட்பாளரும் எங்கு போட்டியாட வேண்டும் என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை.

என்னுடைய ஆசை வேறையாக இருந்தாலும் அது மட்டுமல்ல நான் பிறந்த மண் என்னுடைய மண்ணில் நான் நிற்கிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு:

தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க

கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம்.

அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார?

வெற்றியோட வா நண்பா அப்படின்றத மட்டும் சொன்னாரு.

தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க.

மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை.

மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க.

பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம், எங்க தலைவர் செய்வாரு.

புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம் எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம்

இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க?

கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார்.

உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்சனை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க?

இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும்

காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா?

அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம் எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும்.

உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும்.

தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா?

எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.

Hindusthan Samachar / Durai.J