Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை பாதுகாப்பின்மை மற்றும் நேற்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் உடைந்த மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்தும் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது,
தவெக தலைவரின் உத்தரவின் பேரில் அவரது சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தோம்.
அதனை அமைதியாகவும் ஒவ்வொரு வார்த்தையாகவும் கேட்டார்.
காவல்துறை பெரம்பூரில் எங்கள் தலைவர் வேப்பமனு தாக்கல் செய்த பிறகு அங்கு உள்ள சாலையை மூடி உள்ளனர்.
எங்கள் தலைவர் ஜனநாயக ரீதியாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 70 சதவீதம் பெண்கள் தான் எங்களது பரப்புரைக்கு வருகிறார்கள் என தெரிவித்தார்.
பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் போது அளவுக்கு அதிகமான பேருந்துகள் வந்தது எனவும் அந்த குறுகிய சாலைகளில் மக்கள் இயற்கையாகவே கூடினார்கள் எனவும் தெரிவித்தார்.
எங்கள் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கட்சி நிர்வாகிகளை அழைக்க வேண்டாம் என கூறினார். மேலும் பிரச்சாரத்தின் போது எந்த விளம்பரமும் நாங்கள் செய்யவில்லை எனவும் கூறினார்.
எங்கள் தலைவர் பிரச்சாரத்திற்கு வரும் போது பக்கத்து தொகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்தார்கள்.
கொளத்தூரில் தலைவர் வரும் போது எந்த காவலர்களும் இல்லை ஆனால்
மக்களே இல்லாத தலைவருக்கு முதல்வர் கொளத்தூர் செல்லும் போது 2 ஆயிரம் காவலர்கள் இருந்தனர் என குற்றம்சாட்டினார்.
கொளத்தூரில் கரூரில் இருந்தது போல் மக்கள் அலை இருந்தது. அதை பார்த்தும் எங்கள் தலைவர் பாதியில் பிரச்சாரத்தை நிறுத்தினார்.
பிரச்சார வாகனத்தில் மேலே ஏறி நின்றால் அது ரோட் ஷோ என்கிறார்கள் காவலர்கள், ஆனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் எந்த பிரச்சனைகளும் தொந்தரவும் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்
புதுச்சேரியில் எங்கள் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அங்குள்ள காவலர்கள் அழகாக பாதுகாப்பு கொடுத்தார்கள் நாங்களும் அழகாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் தமிழகத்தில் உள்ள காவலர்கள் அப்படி இல்லை என கூறினார்.
கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். எங்கள் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என திமுக நினைக்கிறது.
வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்தில் பாட்டில்கள் வீசப்பட்டது அது இயற்கையாக நடந்தது போல் திமுக காட்டுகிறது. ஆனால் அது திமுகவால் முன்கூடியே திட்டமிடப்பட்டது.
அந்த இரண்டு பேர் விவரங்கள் மற்றும் வீடியோ ஆதரங்கள் தேர்தல் ஆணையர் இடம் கொடுத்து உள்ளோம் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை
எனவும் எங்கள் பிரச்சாரத்தை பெண்கள் தான் முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் ஒரு சில காவலர்களை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் எனவும் கூறினார்.
எங்கள் தலைவர் நேரடியாக வந்து அந்த கோரிக்கையை முன் வைத்தார் இப்போது நாங்களும் மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையரை சந்தித்து அதன் கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
நாளை நாங்கள் எங்கள் தலைவர் உடன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை திமுக அதிமுக இடையே நேரடியாக போட்டி இருந்தது. ஆனால் இப்போது களம் திமுக தவெக என தான் உள்ளது.
திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் காசு கொடுத்து மக்களை கூட்டி வந்தார்கள் ஆனால்
கொளத்தூரில் மக்கள் அதிகமாக வந்தார்கள் எங்கள் தலைவர் சாலைக்கு வந்தால் என்ன ஆகும் என பார்த்தார்கள்.
எங்கள் தலைவர் வரும்போது கூடும் கூட்டம் எங்கள் தொண்டர் கூட்டம் கிடையாது அவர்களாகவே மக்களாவே வருகிறார்கள் எங்க இருந்து வருகிறார்கள் என எங்களுக்கே தெரியவில்லை எனவும் வரும் தேர்தலில்
நிச்சயம் தவெக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ