Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
சோழவந்தான் பூமேட்டுக்கிராமம் உச்சி மாகாளியம்மன் வடக்கத்திகாளியம்மன் திருவிழா 8 நாட்கள் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் கொடியேற்று விழா நடந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
நேற்று எட்டாம் நாள் திருவிழா காலை பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் வான வேடிக்கை மேளதாளத்துடன் வகையாற்றுக்கு சென்று அங்கு தீர்த்த குடம் மற்றும் பால்குடம் பூஜை செய்தனர்.
பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் பால்குடம் எடுத்து நான்கு ரத வீதியும் சுற்றி வந்து கோவிலை வந்து அடைந்தனர். இங்கு அம்மனுக்கு பால் உள்பட 12 அபிஷேகங்கள் நடந்தது.அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு உச்சி மாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் பவனி வந்து வடக்கத்தி காளியம்மன் கோவில் முன்பாக மாலை மாற்றும் அற்புத நிகழ்ச்சி நடந்தது.
அம்மன் ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை பின் தொடர்ந்து வந்தனர்.
மாவிளக்கு எடுத்து தங்களது வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர்.சிறப்பு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கிராமத் தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் முளைப்பாரி எடுத்து வந்த பெண்களுக்கு பரிசு வழங்கினர்.
Hindusthan Samachar / Durai.J