Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரதேசம், 01 ஏப்ரல் (ஹி.ச)
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராஞ்சியை சேர்ந்த ஆயுஷி சிங் என்ற பெண், வராணசி–தேவ்கர் வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தபோது வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான அலர்ஜி ஏற்பட்டதாகவும், அவரது 2 வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் மருத்துவச் சான்றுகளுடன் பதிவிட்ட அவர், “உடனடி சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக இருந்திருக்கலாம்” என கூறியுள்ளார்.
இந்த புகாருக்கு பதிலளித்த இந்திய ரெயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), அன்றைய தினம் வழங்கப்பட்ட உணவு தரமானதாக இருந்ததாகவும், அதே உணவு குறித்து வேறு எந்த பயணியிடமிருந்தும் புகார் வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், விசாரணைக்காக பயண விவரங்களை பகிருமாறு அந்த பெண்ணிடம் கேட்டுள்ளது.
இந்த சம்பவம் ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam