Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதிக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து திரும்பிய தவெக வேட்பாளர் முரளிதரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பர்கூர் மார்கெட் பகுதியிலிருந்து ஊர்வலமாக நடந்து வந்த வேட்பாளர், பர்கூர் பேருந்து நிலையம் வழியாக காவல் நிலையம் வரை நடைபயணமாக சென்றார்.
அவருக்கு தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் 1000த்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பங்வேற்றிருந்தனர்.
நாம் தமிழர், அதிமுக, திமுகவிற்கு அடுத்து தவெகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பர்கூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J