விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு
விழுப்புரம், 01 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு
Ulundurpet Tollgate Traffic


விழுப்புரம், 01 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வளவனூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி, புதுச்சேரி - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே உள்ள நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி, விழுப்புரம் - வேலூர் இடையிலான தேசிய நெஞ்சாலையில் விழுப்புரம் உள்ள தென்னம்மாதேவி சுங்கச்சாவடி, புதுச்சேரி - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளிலும் 5 ரூபாய் முதல் 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுத்தோறும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஸ்டேக் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு டிஜிட்டல் முறையில் 15 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN